இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும்
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் பயணம் செய்யும்
மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை
வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு வடக்கே குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது
வலுவிழந்துள்ளது. எனவே, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும்
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் அதன் தாக்கம் படிப்படியாக
குறையும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

