எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
கையில் ரோஜாப்பூக்களுடன் சென்று முப்படை வீரர்களுக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.
பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள படைவீரர்
நினைவுத் தூபியில் படை வீரர்கள் நினைவு இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கையில் ரோஜாப்பூக்கள்,
மலர்க்கொத்துக்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

