லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் நேற்று (11) ஏற்பட்ட பெரும்
தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரென்ட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக பல தீயணைப்பு
வாகனங்களும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு
அனுப்பட்ட நிலையில்இ குறித்த பகுதியை கரும்புகைகள் சூழ்ந்ததால்,
குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும்
மூடிக்கொள்ளுமாறு லண்டன் தீயணைப்புப் படை அறிவுறுத்தியது.
பிரென்ட்டில் உள்ள ஆக்ஸ்கேட் தெருவில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில்
அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட பல்நோக்குக்
தொழிற்போட்டையே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
எவ்வாறெனினும் அந்தத் தீப்பரவலானது உள்ளூர் நேரப்படி இன்று காலை
6 மணிக்கு முன்பாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக லண்டன்
தீயணைப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து தீப்பிடித்து எரிந்த இரண்டு மாடிக் தொழிற்பேட்டை
அமைந்துள்ள ஆக்ஸ்கேட் லென், போக்குவரத்துக்காக முற்றிலுமாக
மூடப்பட்டதாகவும் லண்டன் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

