Saturday, August 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்இ தாக்குதலுக்கு உள்ளான
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள்
தொடர்பில் நீதியான விசாரணைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (31) ஊடகவியலாளர்களால்
இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக
பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன,  பல்வேறு நிகழ்வுகளில்
பங்கேற்கவுள்ளார். முன்னதாக,  யாழ். மாவட்ட செயலகத்தில்
ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றிலும்
அவர் கலந்துகொள்ளவிருந்தார்.

இந்நிலையிலேயே,  தாக்குதல்களுக்கு எதிரான நீதியான விசாரணைகளை
வலியுறுத்தி,  ஊடக பிரதி அமைச்சரின் அந்நிகழ்வை யாழ். ஊடக மையத்தைச்
சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments