Saturday, August 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீர்கொழும்பு விபத்து விவகாரம்: மூவர் கைது

நீர்கொழும்பு விபத்து விவகாரம்: மூவர் கைது

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து,  கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு,  தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த
20,  25 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டைகளுக்கு
இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில்,  வீதியைக் கடக்க முயன்ற கொள்கலன்
லொறியுடன்,  நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்ற இரு மோட்டார்
சைக்கிள்கள் மோதியதில் 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள்
உயிரிழந்தனர்.

இச்சம்பவ இடத்தில் பதிவான cctv  உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில்,  லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்ததில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments