கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் வான் கதவுகள் இன்று (03)
பிற்பகல் 3 மணிக்குத் திறக்கப்பட்டு, வினாடிக்கு சுமார் 250 கன மீட்டர் வேகத்தில்
நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், தாழ்வான பகுதிகளில்
வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நுகவெல, ஆற்றங்கரை, மாவத்துர பகுதிகள் மற்றும் மகாவலி ஆற்றின்
உலப்பனே பகுதியிலிருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை,கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையான தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

