ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்
அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்
முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அசங்க
எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பேருந்துகளுக்கான பாதை அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கிய
சம்பவம் தொடர்பிலேயே ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

