Friday, September 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் காரைநகரில் போராட்டம் வெடித்தது

யாழ் காரைநகரில் போராட்டம் வெடித்தது

தண்ணீர்,  வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்று காரைநகர் – ஊரி,  பாலாவோடை,  கல்லந்தாழ்வு,  வேரப்பிட்டி,  மருதபுரம்,  பெரயடைப்பு,  நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு
இருந்தது. அந்த வகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக
மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது,  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக
வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திணைக்கள அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

அதனை தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்
சிறீபவானந்தராஜா,  பிரதேச செயலர் உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகள் சிலர்
போராட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments