யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால்
நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று
காலை 8 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.
படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும்
ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக
சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

