யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இன்று (30) 28ஆவது வாரமாகவும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினரின் கொமாண்டோ பங்களா முன்பாக இந்தப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கின் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச்
சேர்ந்த மக்கள்இ கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த
இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, குறித்த பகுதிகள் உயர்
பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டன.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், குறித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் காணி உரிமையாளர்கள், தமது
காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

