Tuesday, November 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
பலாங்கொட கஸ்ஸப தேரர்,  திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றம்
அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதியற்ற முறையில் புத்தர் சிலை
நிறுவப்பட்டமை மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை
தொடர்பான சர்ச்சையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு
எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத்
தவறியதால் அவருக்கு எதிராகக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை,  நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அனுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மூன்று பொதுமக்கள் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments