விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செம்மணி
மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள
அணையாவிளக்கு நினைவுதூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று சிவாஜிலிங்கத்தின் மரண சடங்கிற்கு வருகை தந்த தொல் திருமாவளவன்
நேற்று மாலை செம்மணி அணையா விளக்கு நினைவு தூபிக்கு சென்று அஞ்சலி
செலுத்தியுள்ளார்.
இதன் போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை
ஐங்கரநேசனும் உடனிருந்தார்.

