Tuesday, November 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு

பண்டிகைக் கால நெருக்கக்கம் மற்றும் தற்போதைய சீரற்ற காலநிலை
காரணமாக சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடைப்பட்ட
விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக
சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.

பெய்துவரும் அதிக மழை காரணமாக கோழிகளின் முட்டை உற்பத்தித் திறன்
80 சதவீதத்திலிருந்து 50 – 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழித் தீவனத்திற்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்தமை உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி பேக்கரி உற்பத்திகள்
சூடுபிடித்துள்ளமையால்,  பேக்கரிகளுக்கு முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இது செயற்கையாக உருவாக்கப்பட்ட விலை உயர்வு அல்லவென்றும்,  தேவை
மற்றும் வழங்கலில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மையே இதற்குக் காரணம் என்றும்
அநுரசிறி மாரிசிங்க விளக்கமளித்துள்ளார். மேலும்இ முட்டையின் இந்த விலை
உயர்வானது எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments