Friday, November 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றாக ஒழிக்கும் நோக்கில்
அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.

மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர்
துஷ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக,  அண்மையில் சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்
அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன்,  எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன்,  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள்
விநியோகிக்கப்படுவதை முற்றாகத் தடுப்பதற்கான விசேட பொறிமுறைகளை
உருவாக்குவது குறித்தும்,  மாவட்ட மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புச்
செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களின்
பொறுப்பதிகாரிகள்,  பிரதேச சபை உறுப்பினர்கள்,  பொதுச் சுகாதாரப்
பரிசோதகர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments