Saturday, November 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை13 ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கு மரணதண்டனை

13 ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கு மரணதண்டனை

2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக இரண்டு
பிரதிவாதிகளுக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (19) மரண தண்டனை
விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மீட்டியகொட,  களுபே பகுதியில் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி
அல்லது அதற்கு அண்மித்த கால்களில் களுவாஹந்தி தீபால் வீரரத்ன என்பவரை
தனிப்பட்ட தகராறின்போது பொல்லால் தாக்கிக் கொலை செய்தமை தொடர்பாக
இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட ஹிக்கடுவஇ களுபே
பகுதியைச் சேர்ந்த 51 வயதான அப்புவாஹந்தி அஜித் எனப்படும் ‘பொட்ட கிரா’
மற்றும் கொரட்டகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதான லத்து அமித் ஆகியோருக்கு
எதிரான வழக்கின் விசாரணையை நிறைவுக்குக் கொண்டுவந்த மேல் நீதிமன்ற
நீதிபதி ருசிர வெலிவத்த இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அரச சட்டத்தரணி செனுரி குணதிலக முறைப்பாட்டை நெறிப்படுத்தியதுடன்,
அன்றைய காலகட்டத்தில் மீட்டியகொட பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ்
பரிசோதகர் தினேஷ் நிஷாந்த இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments