Friday, November 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

ஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி வழக்கில்,  அந்நிறுவனத்தின்
முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி
வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை,  டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்துக்கு வழங்கிய பரிவர்த்தனையுடன்
தொடர்புடையதாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

குறித்த காணிப் பரிவர்த்தனையுடன் தொடர்புபட்டு,  பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக,  நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து
இருப்பதாகக் கூறப்படும் ஆவணமொன்றை அரசாங்க பகுப்பாய்வாளர்
திணைக்களத்துக்கு அனுப்பி பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments