டிட்வா சூறாவளி நாட்டைத் தாக்கி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, அந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று (27) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று முற்பகல் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானபோதே இந்த மௌன அஞ்சலி
நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி இலங்கைக்குத் தென்கிழக்கேயுள்ள
கடற்பரப்பில் உருவான தாழமுக்கம், பின்னர் டிட்வா எனப் பெயரிடப்பட்ட
பாரிய சூறாவளியாக வலுவடைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பெரும்
அழிவுகளை ஏற்படுத்தியது.
சூறாவளியின் தாக்கத்தினால் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு
பகுதிகளில் 540 மில்லிமீற்றர் வரையான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக நாட்டின் 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டன. கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவுகளால்
வீதிக் கட்டமைப்புகள்இ வீடுகள் மற்றும் பெருமளவிலான விவசாய நிலங்கள்
அழிவடைந்தன.
இந்த இயற்கை அனர்த்தத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன்
சுமார் 173 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

