அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ஈரான் இராணுவம் முடிவு செய்யும் என்று
ஐ.நா.வுக்கான ஈரான் தூதுவர் அமீர் சையத் இராவானி அறிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் குண்டு வீசியதை கண்டித்து நியூயோர்க்கில் நேற்று (22) நடந்த ஐ.நா பாதுகாப்பு மன்ற அவசரக் கூட்டத்தில் ஈரானிய தூதுவர் அமீர் சையித் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதுவர் கூறுகையில், ‘அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் இராணுவம் முடிவு செய்யும்.’ என்று கூறியுள்ளார்.

