Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாடெல்லியில் குழந்தைகள் நல வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து

டெல்லியில் குழந்தைகள் நல வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து

இந்தியாவின் டெல்லியில்இ குழந்தைகள் நல வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏழு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் நல வைத்தியசாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பிறந்து சில நாள்களேயான 12 குழந்தைகள் சிக்குண்ட நிலையில், அதில் 07 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட ஏனைய 05 குழந்தைகளும்இ கிழக்கு டெல்லி அட்வான்ஸ் என்ஐசியூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்து நேற்றிரவு பதிவாகியுள்ளதாகவும் இதில் வைத்தியசாலையின் இரண்டு கட்டங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,சம்பவத்தையடுத்து,விரைந்து செயற்பட்ட தீயணைப்புதுறையினர் 16 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments