Thursday, June 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகலைஞர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

சொல்லிசைப் பாடகரான கணேஸ்குமார் சங்கீதன் என்பவரை உடனடியாக
விடுதலை செய்யுமாறு கோரியும்,  பல தசாப்தங்களாக நாட்டில்
நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக
நீக்கக் கோரியும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,  தொழிற்சங்கத்
தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு
தமது பலத்த எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “Repeal PTA! Withdraw PSTA!”,
பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்!’ போன்ற வாசகங்கள்
அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு,  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்
தமது எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments