Saturday, July 25, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாமுதல் தமிழ் பெண் இராஜாங்க அமைச்சர்: உமா குமரன் சாதனை

முதல் தமிழ் பெண் இராஜாங்க அமைச்சர்: உமா குமரன் சாதனை

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
உமா குமரன்,  பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்
தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்,  பிரித்தானியாவின் வெளிநாட்டு,  பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி
அலுவல்கள் அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின்
கீழ் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதன் மூலம், பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல்
தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை உமா குமரன் படைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில்
குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன்,  அண்மையில் நடைபெற்ற
பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து,  தனது சமூக ஊடகப் பதிவில்
அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ‘எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா,
அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.
இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது’
தெரிவித்துள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments