சர்வதேச அளவில் தீரென ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப செயல் இழப்பு காரணமாக ஐரோப்பாவில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல்தொழில்நுட்ப செயல்இழப்பு காரணமாக ஐரோப்பிய விமானநிலையங்கள்
குழப்பமானநிலையையும் தாமதங்களையும் எதிர்கொண்டுள்ளன.
விமானப்போக்குவரத்துடன் தொடர்புடைய ஏனைய போக்குவரத்து சேவைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டன்கேட்விக் விமானநிலையம் உலகளாவிய மைக்ரோசொவ்ட் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதங்களை எதிர்கொள்வதாக பேர்லின் விமானநிலையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள என தெரிவித்துள்ள எயர்பிரான்ஸ் எனினும் பயணத்தை மேற்கொண்டு நடுவானில் உள்ள விமானங்கள் பாதிக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.
உலகளாவிய அமைப்பின் தோல்வி காரணமாக ஷிபோல் விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன விமானநிலையத்திற்கு வருவதும் அங்கிருந்து செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்ஸ்டெர்டாமின் ஷிபோல் விமானநிலையம் தெரிவித்துள்ளது.

