Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்சீனாவில் மருத்துவமனையில் கத்திக்குத்து

சீனாவில் மருத்துவமனையில் கத்திக்குத்து

சீனாவில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில்
பலர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் மருத்துவமனையொன்றில்
இடம்பெற்ற கத்திக்குத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜென்சியோங்கில் உள்ள மருத்துவமனையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சீன தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் நிலைமை பதற்றமானதாக காணப்படுவதாக சம்பவத்தை
நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments