Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டுஇலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை

இலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ
அனுசரணையாளருக்கான வாய்ப்பு இம்முறை இந்திய நிறுவனம் ஒன்றிக்கு
வழங்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை
இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்
எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா, மேற்கிந்தியதீவுகள்
ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை அணி டி பிரிவில் போட்டியிடுவதுடன் இந்த பிரிவில் பங்களாதேஷ்,
நேபாளம், நெதர்லாந்து, தென்னாபிரிக்க ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

உலக கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி முதலாவது போட்டியில்
தென்னாபிரக்காவை எதிர்கொள்ளவுள்ளதுடன் முதலாவது போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கான அனுசரணையாளர் வாய்ப்பு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments