Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை

கலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு பிணை உத்தரவினை வழங்கியது.

பிணை வழங்குவதற்கான மூன்று நிபந்தனைகளை கெஜ்ரிவால் பூர்த்தி செய்ததாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் திகதி அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை,  டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும்,  சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் திகதி சி.பி.ஐ. கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு பிணை வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம்,  டெல்லி மேல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து வந்தார்.

இதில்இ அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12 ஆம் திகதி பிணை வழங்கியது. ஆனாலும், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments