Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம்: விமான விபத்து

ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம்: விமான விபத்து

ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம்: விமான விபத்து குறித்து அஜர்பைஜான் அதிபர் குற்றச்சாட்டு

https://www.facebook.com/thaaitvuk/videos/1223675745398443

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான J2-8243 விமானம் கிரோஸ்னியில் தரையிறங்க இருந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கஜகஸ்தானில் உள்ள அக்டாவில் தரையிறங்க விமான வேண்டுகோள் விடுத்து தரையிறக்க முயற்சித்தபோது தரையில் மோதி விபத்து விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் வான்பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாக சந்தேகம் எழுப்பப்ட்டது

முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது தெரியவந்தது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தது துயரமானது என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்  இடம் ரஷிய அதிபர் புதன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடராக அதிபர் புதின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரமான சம்பவம் ரஷியாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்  என தெரிவித்துள்ளார்.

ரஷியா நடத்திய வான் தாக்குதலாலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதை நேற்று அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியே  உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், அஜர்பைஜான் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் சேதமடைந்து விபத்தில் சிக்கியதற்கு ரஷியா நடத்திய தாக்குதலே காரணம். ஆனால் ரஷிய  வட்டாரங்கள் உண்மையை மூடிமறைக்க முயற்சித்தன. நட்பு நாடான அஜர்பைஜானிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்டு, இதுகுறித்து மக்களுக் தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments