Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாதமிழ் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளபிரித்தானிய பிரதமர்

தமிழ் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளபிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமிழ் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்.

குறித்த நிகழ்வு டவுனிங் தெருவில் உள்ள பிரித்தானிய பிரதமரின் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

இதன்போது,  பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய விலைமதிக்க முடியாத பங்களிப்பை ஸ்டார்மர் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘டவுனிங் தெருவில் உங்களை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விருந்தினராக மட்டும் இல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களித்தவர்களாக நீங்கள் இங்கு உள்ளீர்கள்.

எங்கள் தேசத்திற்கு தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருப்பது நீங்கள் அறிந்ததே. அத்துடன், நமது முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் குறித்து நான் பெருமை கொள்கின்றேன்.

தமிழ் சமூகமாக நீங்கள் இந்த நாட்டிற்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி. தைப் பொங்கலைக் கொண்டாடுவதற்காக,  ​​இன்று இரவு டவுனிங் தெருவில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.

தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியம்இ சமூக ஒற்றுமைக்கான நமது தேவையை நினைவூட்டுகிறது. இந்த கொண்டாட்டம் நம்பிக்கை மற்றும் நன்றி செலுத்துவதற்க்கான கொண்டாட்டம்.

எங்கள் தேசத்தை வளப்படுத்தியதற்கு நன்றி. இந்தத் தைப் பொங்கல் திருநாளில் ஒளி மற்றும் மிகுதியான ஒரு புதிய பருவத்திற்காக நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments