Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் சிறிய விமானம் விபத்து

லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் சிறிய விமானம் விபத்து

இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள லண்டன் சவுத்எண்ட்
விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.

இது பாரிய அளவிலான அவசர நடவடிக்கை மற்றும் விமான சேவைகளை இரத்து
செய்யவும் வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள இடத்தில் 12 மீட்டர் நீளமுள்ள விமான விமானம் தீப்பிடித்து எரிவதாக மாலை 4 மணிளவில் எசெக்ஸ் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து. மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன்,  பொது மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

இந்த விபத்தால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறைந்தது நான்கு திட்டமிடப்பட்ட
விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ஊடகங்களால் பகிரப்பட்ட புகைப்படங்கள்இ லண்டனுக்கு கிழக்கே
சுமார் 35 மைல்கள் (56 கிமீ) தொலைவில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு
மேலே காற்றில் ஒரு தீப்பந்து எழுவதைக் காட்டியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments