Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இன்று(28) காலை வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இதன்போது ஜனாதிபதிக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அன்புடன் வரவேற்றார்.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டுள்ளனர்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments