இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், தியோகரில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சிலிண்டர் வாகனத்துடன் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் நடைப்பெற்று வருகின்றது. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

