எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக அல்லாமல் இராஜதந்திரிகளாக இருங்கள் என கொழும்பு மஹாநாம கல்லூரியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தெரிவித்துள்ளார்.
கொழும்பு 03 இல் அமைந்துள்ள மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில்(29) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு மாணவர் மத்தியில் உரையாற்றிய (வைத்தியர்) ரிஸ்வி சாலி (DR.Rizvie Salih) மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக இருக்ககூடாது. மாறாக இராஜதந்திரிகளாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஒரு அரசியல்வாதி எப்போதும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டு செயற்படும் நிலையில், இராஜதந்திரிகள் எப்போதும் அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு செயற்படுவார்கள் எனவும் சுட்டிகாட்டியுள்ளார். எனவே, நேர்மையான, சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளாக வாழ வேண்டியதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

