Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை மீதான வரியை 20 % ஆக குறைத்த டிரம்ப்

இலங்கை மீதான வரியை 20 % ஆக குறைத்த டிரம்ப்

2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30%  தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி,  இலங்கை உட்பட பல நாடுகளுக்கு
விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி,  தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20மூ ஆகவும்,
பாகிஸ்தானுக்கு 30%  இலிருந்து 19%  ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வீதம் 27%  ஆகவே நீடிக்கிறது. இது மாற்றப்படவில்லை. பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50மூ வரி வீதம் 10%  ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும்
வரி வீதம் 15மூ ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41%  வரி
விதிக்கப்படுகிறது. அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40%  வரி
விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments