Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இன்று சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம்

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இன்று சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம்

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன,  சாவகச்சேரி ,  பருத்தித்துறை, மல்லாகம்
மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று
விஜயம் மேற்கொண்டார்.

அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,  கல்முனை
மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை யூட்சன் ஆகியோரும் வருகை
தந்திருந்தனர்.

பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினரை சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர்.

அதனைத் தொடந்து சாவகச்சேரி நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன்
பிரதம நீதியரசர் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு,  அலுவலக செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன,  பருத்தித்துறை,
மல்லாகம் மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை,  நேற்றைய தினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments