Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது: ஈரான் துணைத் தலைவர் பதிலடி

இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது: ஈரான் துணைத் தலைவர் பதிலடி

ஈரான் இன்று (01) தேசிய துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,  ‘இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது’ என ஈரானிய தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் முதல் துணைத் தலைவர் முகமது ரேசா ஆரிப் நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை,  ஈரான் அரசின் செய்தி நிறுவனம் இஸ்லாமியக் குடியரசு செய்தி
நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்இ நாட்டின் உச்சத் தலைவரை இலக்காகக் கொண்டு
தாக்குதல் நடத்துவதன் மூலம் ஒரு தேசத்தின் ஆன்மாவை உலுக்க முடியும் என்று
எண்ணுகின்றன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்,  இஸ்லாமியப் புரட்சி தியாகங்களின் மூலம் மேலும் உயிர்ப்புடன்,  ஆழமான வேர்களுடன் வளர்ந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதும்இ உள்நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்துவதுமே ஈரானின் தற்போதைய பிரதான வியூகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஈரானிய தலைமைத்துவம் நாட்டில் எந்தவித அதிகாரப் போட்டியும் இல்லாமல், ஆட்சி மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments