தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு உடனடியாக தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய
கைதிகளின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
வலியுறுத்தியுள்ளது.
சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
சலே கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க உடல்நல மற்றும் மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும்இ அவருக்கு அவசர மருத்துவ மற்றும் உளநல சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கண்காணிப்பின்றி நீண்டகால தடுப்புக் காவலுக்கு வழிவகுக்கும்
தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டும்
அல்லது நீக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் குடும்பத்தினரையும்
சட்டத்தரணிகளையும் சந்திக்க அனுமதிப்பதோடு, குற்றச்சாட்டுகள் பதிவு
செய்யப்படாதவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் அல்லது
விடுதலை செய்யப்பட வேண்டும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்
வலியுறுத்தியுள்ளது

