Sunday, July 26, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து
6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மேற்கொண்ட சோதனையின்போதே வீட்டின் உள்ளே இருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சில சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக
அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும்,  இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான
தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments