Friday, September 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையோஷித வழக்கு - விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்கான திகதி அறிவிப்பு

யோஷித வழக்கு – விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்கான திகதி அறிவிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச
ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்
தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 13 அன்று விசாரணைக்கு முந்தைய
கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

இன்று (17) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்னவின் முன்
இவ்வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது,  ​​பிணையில் உள்ள குற்றம்
சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அப்போது,  ​​வசந்த கரன்னாகொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரப்பினர்
ஷவீந்திர பெர்னாண்டோ,  வழக்கில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்ட சில
அறிக்கைகளின் முழுமையான பிரதிகள் பிரதிவாதி தரப்பிற்கு வழங்கப்படவில்லை
என்று தெரிவித்தார்.

யோஷிதா ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரப்பினர் சம்பத் மெண்டிஸ்
, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட சில
ஆவணங்கள் தெளிவற்றவை என்றும், அவற்றின் தெளிவான பிரதிகளை
வழங்குமாறும் கோரினார்.

இதற்குப் பதிலளித்த,  இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி
பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க,  பிரதிவாதியால் கோரப்பட்ட சில
ஆவணங்கள் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால்,  அவற்றை
வழங்க இயலாது என்றும்,  ஆணைக்குழுவின் வசம் உள்ள ஆவணங்களை வழங்க
முடியும் என்றும் தெரிவித்தார்.

உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதிஇ நீதிமன்றத்தின் காவலில் உள்ள
பிரதிவாதியால் கோரப்பட்ட ஆவணங்களைஇ நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு
உட்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இலஞ்ச ஆணைக்குழுவிடம் வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின்,
அவற்றை பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ச,  நிறுவப்பட்ட
நடைமுறைக்கு மாறாக,  2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையில் ஒரு நிர்வாகப்
பயிற்சி மாணவராக அவரை நியமித்து,  அரசாங்க செலவில் பிரிட்டனில் உள்ள
அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளச்
செய்து ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி இலஞ்ச ஆணைக்குழு
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments