ஹொங்கொங் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா (Kaushal Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆசிய கிண்ணத்துக்கு ஹொங்கொங் தயாராகி வரும் நிலையில், இவரது நியமனம் ஒரு முக்கியமான நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் 03 சதங்களும் 12 அரைச்சதங்களும் அடங்கும்.
கௌஷால் சில்வா (Kaushal Silva) ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் கௌஷால் சில்வா, “ஹொங்கொங் அணியைப் பயிற்றுவிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர்களுடன் பணியாற்ற மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

