Sunday, November 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலைகள் அதிகரிப்பு

சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலைகள் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள்,  பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை
அதிகரிக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை
உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய,  சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவாலும்,  பிரைட் ரைஸ் மற்றும்
கொத்து ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக
அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் சமையல்
எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி,  12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின்
விலை 1,775 ரூபாவாலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின்
விலை 732 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments