Sunday, November 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரியில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வுப் பேரணி

சாவகச்சேரியில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வுப் பேரணி

சாவகச்சேரி லயன்ஸ் கழகமும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஏ. கேதீஸ்வரன்,  யாழ்ப்பாண மாவட்ட தொற்றா
நோய்த் தடுப்புப் பிரிவு விசேட வைத்திய நிபுணர் பி. ஜெசிதரன்,  சாவகச்சேரி
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அச்சுதன்,  சாவகச்சேரி வைத்திய அதிகாரி
வைத்தியர் காண்டீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் உதயசூரியன்,  நகரசபைத் தவிசாளர்
ஸ்ரீபிரகாஷ், லயன் வைத்தியர் அருளானந்தம்இ சாவகச்சேரி லயன்ஸ் கழகத்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்இ இரண்டாவது உப மாவட்ட ஆளுநர் லயன்
மயூரதன், சேவைத் திட்டத் தலைவர் லயன் ரவிசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன்,  வட்டுக்கோட்டை மற்றும் தென்மராட்சி கிழக்கு லயன்ஸ் கழக
உறுப்பினர்கள்,  சாவகச்சேரி றீபேக் கல்லூரி அதிபர்,  ஆசிரியர்கள்,  மாணவர்கள்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள்,  பணியாளர்கள்
மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்களும் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய
அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

சமூக நலன் சார்ந்த சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும்
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments