பாடல் வரிகளும்,இசையும் இரண்டும் முக்கியம் தான். ஒன்றை ஒன்று ஏன் பிரிக்க வேண்டும்.இளையராஜா,வைரமுத்து பிரச்சனை இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை தான்-நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
10 ஆண்டுகளுக்கு முன்பு சீமான் மாற்றத்தை கொண்டு வந்து விட்டார்.அதிகாரத்தை தான் பிடிக்க முடியவில்லை ஆனால் மாற்றம் தொடங்கி உள்ளது.-இயக்குனர் அமீர்.
எனது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு எழுத சென்றார்.அப்போது அவர் அணிந்திருந்த ஹிஜாப்யை கழற்ற கூறியதால் நீட் தேர்வை எழுதாமல் அவர் வீட்டிற்கு வந்து விட்டார்.- அமீர்
சவுக்கு சங்கரை கஞ்சா சங்கர் ஆக மாற்ற வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் – சீமான்
சென்னை நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேன்டனில் உள்ள திரையரங்கில் அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்தார்
அதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
ஆதம் பாவா அவர்கள் எழச்சித்தமிழர் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு படம் , அதில் தம்பி அமீர் நடத்துயள்ளார் , இந்த படத்தில் தம்பி அமீர் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்
அமீர் ஸ்க்ரீனில் ரகளை செய்வது விளையாடுவது போல செயல்பட்டுள்ளார் , இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது , கதையை நகத்தி கொண்டு செல்லும் மிக சிறப்பான உரையாடல்கள் உள்ளது
வாக்குக்கு காசு அளிக்கப்படுகிறது என நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது , மே 10 ஆம் தேதி இந்த படம் வெளிவர உள்ளது
அரசியல் புரிதலை உருவாக்கும் ஒரு படம் இது
தேர்தலில் நிற்பது தான் அரசியல் என நினைக்க கூடாது மக்களின் பிரச்சனைகளை குரல் குடுத்து கேள்வி கேட்பது அரசியல் தான்
தேர்தலுக்கு முன்னாள் இந்த படம் வெளியாகியிருந்தால் பொதுவாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்திருக்கும்
தாமரை கண்ணீரில் மலராது
இசை மற்றும் மொழி இரண்டும் ஒன்றுதான் இளையராஜா ஒரு படைப்பாளியாக அங்கீகாரம் வேண்டும் , இளையராஜா தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது என கூறவில்லை அந்த களை பொருளை உருவாக்கிய என்னுடைய பங்கு உள்ளது அதில் எனக்கு கிடைக்க வேண்டியது வேண்டும் என்று கூறுகிறார்

