Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுஷ் கஞ்சாவுடன் விமான நிலையத்தில் இளைஞரொருவர் கைது

குஷ் கஞ்சாவுடன் விமான நிலையத்தில் இளைஞரொருவர் கைது

05 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா போதைப் பொருளுடன் தாய்லாந்தில் இருந்து  நாட்டிற்கு வருகை தந்த இளைஞரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய ஹோமாகமவைச் சேர்ந்த தொழில்முறை நடனக் கலைஞரான
இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
இந்த சந்தேக நபர் தனது பயணப் பையில் மிகவும் சூட்டுமமானமுறையில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த 05 கிலோகிராம் 278 கிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

36 தனித்தனி பொதிகளில் பொதி செய்யப்பட்ட இந்த குஷ் கஞ்சா 2 கோடி ரூபாய்
பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஏர் ஏசியா விமான மூலம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றைய தினம்
இரவு 10.40 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments