Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது , ‘ அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்கள் மீதான உங்களது அர்பணிப்பு,  உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும்,  வெற்றியடையவும் எனது வாழ்த்துகள்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளளார்.

மேலும் ராகுல் காந்தி தொடர்பான வீடியோவொன்றினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments