Wednesday, August 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து,  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன்,  இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அதற்கமைய பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளையும்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments