Tuesday, November 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகஸ்ஸப தேரருக்கு விளக்கமறியல்

கஸ்ஸப தேரருக்கு விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை
நிறுவியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில்இ பாலங்கொட கஸ்ஸப தேரர்
இன்று (16) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது
இ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராகப் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான அவர்,  தான் ஆஜராகத்
தவறியமைக்கான காரணங்களை நீதவானிடம் விளக்கினார்.

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக உயிர் அச்சுறுத்தல் கொண்ட
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராக
முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

எனினும், அவரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டதுடன்,  நாளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும்
உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments