நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், இரு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபா
நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

