பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு கேட் மிடில்டன்
மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
பயணத்தின் முதல் நாளான இன்று (16) மும்பையில் உள்ள பாரம்பரியமிக்க
பகுதியில், இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன்
இணைந்து அவர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
தெற்கு மும்பையின் பலார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நடைபெற்ற
இந்த உற்சாகமான கிரிக்கெட் விளையாட்டின் போது, பாரம்பரிய தலைப்பாகை
அணிந்த இசைக்கலைஞர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், வில்லியம் மற்றும்
கேட் இருவரும் சச்சின் வீசிய பந்துகளை எதிர்கொண்டனர்.

