Tuesday, November 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள
சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது
இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன்இ அன்னாரின் குடும்பத்தினருக்கும்
உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாகத் 69ஆவது வயதில் காலமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியை இன்று (16) நடைபெறும்.

வல்வெட்டித்துறை,  நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் உடல்,  இன்று மதியம் வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காகவும்
வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து,  வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்குப்
பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments